ஒரேநேரத்தில் மூன்று படங்களில் நடித்துவரும் ஜெயம்ரவி


ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கி வரும் படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் முன்பு பின்னி மில்லியில் எளிமையாக தொடங்கியது.

படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. மூன்று பாடல் காட்சிகளும், இரண்டு வசனக் காட்சிகளும் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். அவையும் முடிந்தால் படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு தயாராகி விடும்.
ஜெயம் ரவி தற்போது தனி ஒருவன், சுராஜின் அப்பாடக்கர், லக்ஷ்மணின் ரோமியோ ஜுலியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பூலோகம் தயாராகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படங்கள் முடிந்த பிறகே புதுப்படங்களில் கமிட்டாவது என்ற முடிவில் இருக்கிறார்.


No comments:

Post a Comment