நாளை முதல் லிங்கா முன்பதிவு ஆரம்பம்















ரஜினியின் லிங்காபடம் வருகிற 12–ந் தேதி ரிலீசாகிறது. ரஜினி பிறந்த நாளும் அதே தினத்தில் வருவதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் பட ரிலீசை கொண்டாட தயாராகிறார்கள்.
லிங்காதிரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினி கட்அவுட்கள் அமைக்கின்றனர். கொடி தோரணங்களும் கட்டுகிறார்கள். ரத்ததானம், கண் தானம், ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.
லிங்காஇந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 1000 தியேட்டர்களிலும் இப்படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் லிங்காபடத்துக்காக அனைத்து தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இதர படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்காவில் 200–க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர் களிலும் திரையிடப்படுகிறது. ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் லிங்காவை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர்.
லிங்காவில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். விஜயகுமார், ஜெகபதி பாபு, சுதீப், சந்தானம், கருணாகரன் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அணைக்கட்டு சர்ச்சையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். இதில் ஒரு ரஜினி கலெக்டர் கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது. தணிக்கை குழுவினர் லிங்காபடத்தை பார்த்து யுசான்றிதழ் அளித்துள்ளனர். இந்தி பதிப்புக்கும் யுசான்று கிடைத்துள்ளது. இந்த வருடத்தின் பிரமாண்ட படமாக லிங்காவருகிறது.


No comments:

Post a Comment