சூர்யா வெளியிடும் 'நண்பேன்டா' இசைஉதயநிதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'நண்பேன்டா' படத்தின் இசையினை டிசம்பர் 23ம் தேதி நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார்.
உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'நண்பேன்டா'. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது படத்தின் இசையினை இம்மாதம் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'நண்பேன்டா' இசையினை சூர்யா வெளியிட ஆர்யா பெற்றுக் கொள்கிறார். படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ராஜேஷ் வெளியிடுகிறார். இயக்குநர் ராஜேஷிடம் தான் ஜெகதீஷ் இணை இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment