மீண்டும் இணையும் சுப்ரமணியபுரம் கூட்டணி

ஜெய், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான படம் சுப்ரமணியபுரம்’. இப்படத்தை சசிகுமார் இயக்கியிருந்தார்.
காதல் கதையை மையமாக வைத்து 80-களில் உள்ள கால கட்டத்திற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இப்படம் உருவாகியிருந்தது. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான ‘‘கண்கள் இரண்டால்’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது இதே கூட்டணியில் மற்றொரு படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தை அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்க இருக்கிறார். இவர் ஜில்லாபடத்தை இயக்கிய நேசனனின் சீடராவார்.
சிறு நகர் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சமுத்திரகனி, ஜெய், சசிகுமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.
மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடவுள்ளனர்.


No comments:

Post a Comment