செல்கான் விண் 400 மொபைல் போன் ஒரு பார்வைசெல்கான் மொபைல்ஸ் நிறுவனம் தன்னுடைய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போனைச் சென்ற வாரம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன் பெயர் Celkon Win 400. இந்த மொபைல் போன், இந்நிறுவனத்தின் முதல் விண்டோஸ் போன் 8.1 ஆகும். குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செல்கான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,979. 

இந்த போனில் WVGA டிஸ்பிளே கொண்டுள்ள 4 அங்குல கெபாசிடிவ் டச் திரை தரப்பட்டுள்ளது. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்Qualcomm Snapdragon 200 (MSM 8212) ப்ராசசர் இயங்குகிறது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு 5 எம்.பி. திறனுடன் கேமரா உள்ளது. முன்புறக் கேமரா, 1.3 மெகா பிக்ஸெல் திறன் உடையதாக உள்ளது. 3ஜி இணைப்பில் இயங்கக் கூடிய திறன் கொண்ட இந்த மொபைல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது.


இதன் ராம் மெமரி 512 எம்.பி. அளவுடையது. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் போன் 8.1. இதன் பரிமாணம் 125.4 x 65 x 10.3 மிமீ. இதன் எடை 121 கிராம்.
எப். எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், இசை ரசிகர்களை மகிழ்விக்கும். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைல் போன், அனைத்து வர்த்தக இணைய தளங்களிலும், மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது. இதனை விற்பனைக்கு வெளியிட்டு, செல்கான் மொபைல்ஸ் நிறுவனத் தலைவர் குரு உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் மற்றும் குவால்காம் நிறுவனங்களுடன், கொண்டுள்ள ஒப்பந்தம், செல்கான் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஒரு புதிய மைல்கல் என்றார். 


No comments:

Post a Comment