மோட்டாரோலா லாலிபாப்அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்ட் பதிப்பு 5.0 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தன் புதிய மொபைல் போன்களில் (Moto X and Moto G, Moto G LTE, Moto E, Droid Ultra, Droid Maxx, and Droid Mini) அப்கிரேட் செய்யப்பட்டுத் தரப்படும் என மோட்டாரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. வர இருக்கும் தன் மொபைல் சாதனங்கள் அனைத்திலும், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஸ்டத்தின் திறன் குறித்து மதிப்பிடுகையில், மோடாரோலா நிறுவனம் 5 நிலை அளவில், 5க்கு 5 மதிப்பெண் வழங்கியுள்ளது.

புதிய வண்ணங்கள் அடங்கிய கட்டமைப்பு, எளிதான இடைமுகம், மேம்படுத்தப்பட்ட நோட்டிபிகேஷன்கள், பேட்டரி மின் சக்தி மிச்சப்படுத்துதல், கூடுதல் பாதுகாப்பு, ஆண்ட்ராய்ட் திறன் கூட்டப்பட்ட லாக், புதிய குயிக் செட்டிங்ஸ் அமைப்பு, பகிர்ந்து பயன்படுத்துதலில் கூடுதல் வசதி, கூடுதல் மொழிகளுக்கான சப்போர்ட் ஆகியவை லாலிபாப் சிஸ்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.No comments:

Post a Comment