3 கோடியைத் தாண்டியது லைன் மெசஞ்சர்இந்தியாவில் மெசேஜ் அப்ளிகேஷன் ''LINE” பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் 
நாட்டினல் தலைமை அலுவலகத்தினைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின், இந்தியப் பிரிவின் தலைவர் சிங் சோனி, சென்ற வாரம் இதனைத் தெரிவித்தார். இதில் அளிக்கப்படும் புதிய வசதிகளும், நவீன தொழில் நுட்பமும், இதனை, மெசேஜ் அப்ளிகேஷன் என்பதனையும் தாண்டி பலவித வசதிகளை அதிகபட்ச பயன்பாட்டிற்குத் தருவதாய் மாற்றியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை 5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பன்னாட்டளவில் அழைப்புகளை (LINE Premium Call) ஏற்படுத்தும் வசதியினை இந்தியாவில் அண்மையில் இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இதே கட்டமைப்பில் கேம்ஸ் மற்றும் பிற வசதிகளையும் தருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பன்னாட்டளவில் இந்த வசதியை 56 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இந்த நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. பன்னாட்டளவில் 60 கோடி பேர்களையும், இந்தியாவில் 6 கோடி பேர்களையும் கொண்டுள்ள வாட்ஸ் அப் (Whatsapp) இவ்வகையில் முதல் போட்டியாளராகும். இதனை அடுத்து பேஸ்புக் மெசஞ்சர், வைபர், ஹைக், கூகுள் டாக், சீனாவின் வி சாட் (We Chat) மற்றும் நிம்பஸ் ஆகியவை இந்த போட்டியில் உள்ளன. 2013 ஆம் ஆண்டில், LINE இந்தியாவில் அறிமுகமானது. 


1 comment: