சூர்யாவின் அடுத்தபடத்தின் டைட்டில் " 24 "


லிங்குசாமி இயக்கத்தில் நடித்த அஞ்சான் படத்தின் தோல்வியை மறந்துவிட்டு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் உற்சாகமாக 
நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் கே.குமார், பா.ரஞ்சித், ஹரி ஆகிய மூன்று இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சூர்யா.

இவற்றில் மாஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்க இருப்பது விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தில்தான்.ஏற்கெனவே தமிழில் சிம்பு நடித்த 'அலை' மற்றும் மாதவன் நடித்த 'யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் கே.குமார்.

அலை படம் தோல்விப்படமாக அமைந்தாலும் யாவரும் நலம் வித்தியாசமான படம் என்று பாராட்டப்பட்டது.யாவரும் நலம் படத்தை அடுத்து நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் மனம் என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது மனம். தற்போது சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்குவதன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் விக்ரம் கே.குமார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு '24' என்ற வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார் விக்ரம் கே. குமார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

'
சில்லுனு ஒரு காதல்' படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இந்தப் படத்திற்குத்தான்.

"24'
படத்திற்கான வேலைகளில் இப்போது படு பிசியாக இயங்கி வருகிறார் விக்ரம் கே.குமார்.
'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் 24 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.


No comments:

Post a Comment