அஜீத் படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது
அஜீத்தும் கெளதம்மேனனும் முதன்முதலாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.. அஜீத்தின் 55வது படமான இந்த படத்தில் கெளதம்மேனன் மட்டுமின்றி, ஹாரிஸ் ஜெயராஜூம் முதன்முறையாக அஜீத் படத்துக்கு இசையமைக்கிறார். அதேபோல் அனுஷ்காவும் முதன்முறையாக அஜீத்துடன் இணைந்துள்ளார்.
மேலும், பல மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதும் இதுவரை இதுதான் படத்தின் டைட்டீல் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. எப்படி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்திற்கு கடைசி வரை டைட்டீல வெளியிடாமல் இழுத்தடித்தார்களோ அதேபோல் இந்த படத்தின் டைட்டில் விசயத்திலும் இழுத்தடித்து வருகிறார்கள்.
அதனால், ஆயிரம் தோட்டாக்கள், சத்யா போன்ற டைட்டீல்களை வைப்பதற்கு அவர்கள் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் கசிந்த வண்ணம் உளளன. அதோடு, தீபாவளிக்கு டைட்டீல் அறிவிப்பார்கள் என்று அஜீத்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
இந்தநிலையில், ரசிகர்களை இன்னும் ஏமாற்ற வேண்டாம் என்று நினைத்த அஜீத், டைட்டிலை வெளியிடுமாறு கெளதம்மேனனை கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால், இன்று அப்படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடயிருப்பதாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது.


No comments:

Post a Comment