எக்ஸெல்லில் நெட்டு வரிசையை பிரிப்பது எப்படி?















ஒர்க் ஷீட்டில் மறு நாளைய தேதி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை 
இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க் ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா = TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.

நெட்டுவரிசை பிரித்தல்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன். இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது. 
நெட்டு வரிசை A வில், இந்த இரட்டைச் சொல் பெயர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை முதலில் ஹைலைட் செய்திட வேண்டும். அடுத்து Data என்னும் டேப்பிற்கு மாறவும். அங்கு Text to Columns என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Convert Text to Columns என்னும் விஸார்ட் மேலாகக் கிடைக்கும். 

இதில் Delimited என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது மாறா நிலையில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்திடவும். அடுத்து இந்த பெயர்களில் என்ன வகை delimiter வைத்துக் கொள்ளலாம் என்பதனைத் தெரிவிக்க வேண்டும். அடுத்து Next செல்லவும். வேறு delimiter கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் (tab or comma), அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டதாகக் கூடத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிளிக் செய்து முடிக்கவும். இந்தடேட்டாவினை இன்னொரு வரிசையில் அமைக்க வேண்டும் எனில், Destination என்னும் பீல்டில் அமைக்கவும். இனி தனித்தனியான வரிசையில் அமைந்துவிடும். மேலாகச் சென்று இந்த வரிசைகளுக்கான தலைப்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்தல் போதும்.

ஹெடர் - புட்டர் எழுத்துக்கள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது.

முதலில் டெக்ஸ்ட் என்டர் செய்திடவும். பின்னர் இந்த டயலாக் பாக்ஸில் உள்ள A என்னும் டூலில் கிளிக் செய்திடவும். உடன் கிடைக்கும் விண்டோவில் தேவையான எழுத்துவகையில் டெக்ஸ்ட்டை மாற்றலாம். குறுக்குக் கோடிடலாம், சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் அமைக்கலாம். உங்களுடைய எக்ஸெல் எம்.எஸ். ஆபீஸ் 2007 வகையைச் சேர்ந்தது என்றால், வண்ணத்தையும் மாற்றலாம். எக்ஸெல் 97க்கு முன்பு வந்த தொகுதிகளில் இந்த கலர் மாற்றும் வசதி இருந்தது. பின் எக்ஸெல் 2007ல் தான் இது மீண்டும் தரப்பட்டது. மற்ற தொகுப்பில் உள்ள ஹெடர்களில் வண்ண எழுத்துக்கள் வேண்டுமாயின், வண்ணத்தில் எழுத்துக்கள் உள்ள கிராபிக்ஸ் அமைத்து அப்படியே பேஸ்ட் செய்திட வேண்டியதுதான். இந்த வழியை நிறுவனங்களின் இலச்சினைகள், மற்ற கிராபிக் ஆப்ஜெக்ட்களை அமைப்பவர்கள் மேற்கொள்கிறார்கள்.


No comments:

Post a Comment