அதிர்ச்சி கொடுத்த சந்தானம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு பிறகு தற்போது பெயரிடப்படாத ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். இதற்கிடையே எந்திரனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியுடன், லிங்காவில் காமெடியனாக நடித்து வருவதால், இந்த படம் தனது மார்க்கெட்டை மீண்டும் பரபரப்பாக்கும் என்றும் எதிர்ப்பார்க்கிறார்.


மேலும், ஆர்யா, விஷால், ஜீவா, கார்த்தி போன்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி தர்பார் நடத்திக்கொண்டிருந்த சந்தானம், இந்த ஹீரோ பிரவேசம் காரணமாக அவர்களால் ஓரங்கட்டப்பட்டும் வந்தார். ஆனால், பலரும் அவரை நிராகரித்து வந்த நேரம், ஆர்யா மட்டும் தனக்கு நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஹிட்டாக அமைந்த பாஸ் என்ற பாஸ்கரன் படம் ஓடியதே சந்தானத்தின் காமெடிக்காகத்தான் என்பதை ஒப்புக்கொண்டு, மீண்டும் அப்படத்தை இயக்கிய ராஜேஷ்.எம்மின் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்துக்கு சந்தானத்தை தற்போது புக் பண்ணியிருக்கிறார்.


அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற தனது நட்பு வட்டார ஹீரோக்களுடனும் இணைந்து விட வேணடும் என்று நேரம் பார்த்துககொண்டிருந்த சந்தானம், தற்போது நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டும் வகையில் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி, கார்ததிக், சிவகார்த்திகேயன், விஜயசேதுபி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தில் தனக்கும் சான்சு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


முக்கியமாக, தற்போது ஒரு நாளைக்கே 10 லட்சம் சம்பளம் வாங்கி நடிக்கும் சந்தானம், எனக்கு ஒரு பைசாகூட சம்பளமாக வேண்டாம். உங்களை மாதிரியே நானும் காசு வாங்காமல் நடித்துத்தருகிறேன் என்று கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளாராம்.

No comments:

Post a Comment