சுசிந்திரன் படத்தின் படபிடிப்பு ஓவர்













25 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஜீவா படத்தின் டைட்டிலை சுசீந்திரன் தான் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழுவில் கபடியை காட்டியவர் ஜீவாவில் காட்ட இருப்பது கிரிக்கெட்டை. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கும் ஹீரோவிற்கு கிரிக்கெட் என்றால் உயிர். அவன் எப்படி இந்திய அணியில் இடம் பிடிக்கிறான். அதற்கு இடையில் அவன் சந்திக்கும் பிரச்னைகள், அவமானங்கள்தான் கதை. கபடி விளையாடிய விஷ்ணுவே இதில் கிரிக்கெட்டும் விளையாடுகிறார். அவரது ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கபடியில் புரோட்டா சாப்பிட்ட சூரி இதில் என்ன சாப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அவர்தான் காமெடியன்.

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. சுசீந்திரனின் தி நெக்ஸ் பிக் பிலிமும், ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைக்கிறார் தற்போது இதன் டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதி வாரத்தில் ரிலீசாகிறது.


No comments:

Post a Comment