விஜய்யுடன் இணையும் ஆர்யா

ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யா தற்போது புறம்போக்கு, மீகாமன் என்ற படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். 






இதையடுத்து மதராசப்பட்டிணம் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் விஜய்யுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் தான் இயக்கியுள்ள சைவம் படத்தின் ரிலீஸ் மற்றும் ஜுன் 12ம் தேதி நடக்கவிருக்கும் விஜய், அமலா பாலின் திருமணம் முடிந்த பிறகு இப்படத்தின் வேலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.