விஜய் அதிரடியில் ஏழு சண்டை காட்சி

ஜில்லா படத்தையடுத்து விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.



இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களும், ஒரு தீம் மியூசிக்கும் உள்ளது. அனிருத் அதில் நான்கு பாடல்களை முடித்து விட்டார். இன்னும் ஒரு பாடல் மட்டும்தான் இருக்கிறது. இதில் ஒரு பாடலை விஜய் பாடுவார் என்று எதிபார்க்கப்டுகிறது.
ஏற்கனவே சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடும் விஜய்க்கு மேலும் தீனி போடும்விதமாக இந்த படத்தில் 7 சண்டை காட்சி இடம்பெற போகிறதாம். அதில் ஒரு சண்டை காட்சியில் இரண்டு விஜய் மோதுவது போன்று கூட காட்சி உள்ளதாம்.