அடுத்து "ராணா" இயக்குகிறார் செளந்தரியா!

ரஜினியை வைத்து ஏற்கனவே சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தைதான் முதலில் ஆரம்பித்தார் அவரது இளைய மகளான செளந்தர்யா. ஆனால் சில பல
காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டது.
 அதையடுத்து ரஜினி நடிக்கயிருந்த ராணா அவரது உடல்நலம் கருதி கிடப்பில் போடப்பட்டதையடுத்து, அதே சுல்தான் தி வாரியரில் சிலபல மாற்றங்களை செய்து அதை கோச்சடையானாக மாற்றினார் செளந்தர்யா. அப்படம்தான் இப்போது மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இந்த நிலையில், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு கிடப்பில் கிடக்கும் ராணா படத்தையும் தானே இயக்கப்போவதாக தற்போது தெரிவித்துள்ளார் டைரக்டர் செளந்தர்யா. ஆனால் அதிரடியான கதைகளில் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால், ராணா படத்தையும் கோச்சடையானைப்போன்றே அதிநவீன தொழில் நுட்பத்தில்தான் இயக்கப்போகிறாராம்.
இதுகுறித்து இதுவரை தந்தை ரஜினியிடத்தில் அவர் தெரிவிக்காதபோதும், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ராணா குறித்து பேசப்போவதாக சொல்லும் செளந்தர்யா, அந்த கதையையும் பக்காவாக ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம்.