சங்கரின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய்

இயக்குனர் சங்கர் தற்போது "ஐ" திரைபடத்தின் இறுதிகட்ட பணியில் உள்ளார். இதனை அடுத்து இளையதளபதி விஜய் சங்கரின் அடுத்தபடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் தற்போது முருகதாசின் "கத்தி" படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இதை அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படத்தை முடித்த பின் சங்கரின் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
முன்பு "நண்பன்" படத்தில் இவர்களின் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.