டமால் டுமீல் - திரைவிமர்சனம்

பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு பணத்தால் இரண்டு பேர், பயத்தால் இரண்டு பேர் என 4 பேர் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்பட்ட 4 பேரும் இறப்பது ஒரே ரூமில்.




சென்னை கே.கே.நரில் உள்ள ஒரு பெரிய அப்பார்ட்மெண்டில் தனக்கென்று ஒரு பிளாட் எடுத்து தங்கி வருகிறார் நாயகன் வைபவ். ஐ.டி.கம்பெனியில் பணிபுரிகிறார். இவருடைய காதலி ரம்யா நம்பீசன். திடீரென வைபவ் வேலைக்கு ஆப்பு வைத்து வீட்டுக்கு அனுப்புகிறது அந்த பிரபல நிறுவனம்.. வேலை போன விஷயத்தை காதலியிடம் சொன்னால் பிரச்சனை வருமோ என்று பயப்படுகிறார். தான் குடியிருக்கும் அந்த E6 பிளாட்டால் வைபவ்க்கு என்ன நேரிடுகிறது. அவருக்கு வந்த பிரச்சனையில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக் கதை.

காலாவதி மருந்துகளை விற்றதால் இரண்டு வில்லன்களில் ஒருவரான ஷயாஜி ஷிண்டேவை போலீஸ் தேடுகிறது. வைபவ் குடியிருக்கும் அதே பிளாட்டில் F6ல் பதுங்கியிருக்கிறார் ஷிண்டே. தனக்கு வரவேண்டிய 5 கோடி பணத்தை கோட்டா ஸ்ரீனிவாசிடம் கேட்டு அதை அந்த ப்ளாட்க்கு கொண்டு வரச் சொல்ல அங்கே ஆரம்பிக்கிறது பணத்தில் குழப்பம், சாரி படத்தில் குழப்பம். பணத்தை மாற்றி வைபவ் ப்ளாட்டில் வைத்துவிட்டு செல்கிறது அந்த கோஷ்டி. தனக்கு கிடைத்த பணத்தை அடைய நினைக்கும் வைபவ்க்கு அந்த பணத்தால் வரும் பிரச்சனை, இதனால் அவர் அனுபவிக்கும் வேதனைகள் என தொடர்கிறது கதை...

ஒரு பக்கம் பணம் இன்னும் வராமல் கோபத்தில் கோட்டா ஸ்ரீனிவாசிடம் சண்டை போடுகிறார் ஷிண்டே. இன்னொரு பக்கம் இந்த பணத்தை வைத்து எப்படியாவது வெளிநாட்டிற்கு தப்பிட வேண்டும் என்று பிளான் போடுகிறார் வைபவ். அப்படி இப்படி என இழுத்து ஜவ்வு மாதிரி நம்மை வளைய வைக்கிறது திரைக்கதை. படத்தின் பெரிய திருப்புமுனையே வைபவ் வைத்திருக்கும் செல்போன் தான். கொஞ்சம் மங்காத்தா, கொஞ்சம் கந்தசாமி, கொஞ்சம் திருட்டுபயலே என தமிழ்சினிமாவில் இருந்தே நிறைய உருவியிருக்கிறார்கள் இந்த டமால் டுமீலில்...

தனக்கு கொடுத்த கதாபாத்திரப்படி அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் அந்த பிளாட்டில் வைபவ்விடம் பிட்டு சீ.டி. கேட்டு வரும் அந்த நபர் ஓவர் ஆக்டிங் சிகாமி தான்... பாஸ் நீங்க நல்லா வருவீங்க....

சீரியஸா காட்ட வேண்டிய இரண்டு வில்லன்களையும் காமெடி பீஸ் ஆக்கி த்ரில்லிங் காட்சிகளிலும் நம்மை கொட்டாவி விட வைக்கிறார் இயக்குநர் ஸ்ரீ... படத்தின் பாடல்கள் ஓ.கே. ரகம் தான் என்றாலும், பெரும்பாலான இடங்களில் வரும் பின்னணி இசை ஏற்கனவே காதில் பல நூறு தடவை கேட்டதுமாதிரியே இருக்கிறது படத்தின் பெயரை சொல்லவிரும்பவில்லை... ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய ப்ளஸ் என்றே சொல்லலாம் வாழ்த்துக்கள் எட்வின் சகே...