விஜய் படத்தின் க்ளைமாக்ஸ் செலவு 1 கோடி!

கடந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததால் பெரிய பரபரப்பு நிலவியது. அதனால், அடுத்தபடியாக அவர்கள் ஒரே நேரத்தில் நடிக்கும் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 ஆனால், அதையடுத்து விஜய்யின் கத்தி படப்பிடிப்பு உடனடியாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில, கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படபிடிப்பு வருகிற 9-ந்தேதிதான் நடைபெறுகிறது.

அதனால் இந்த முறை விஜய்-அஜீத் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக, வருகிற தீபாவளிக்கு விஜய் மட்டும் களத்தில் குதிப்பார் என்று தெரிகிறது. ஆனால், துப்பாக்கி கொடுத்த திருப்தியை தலைவா, ஜில்லா படங்கள் விஜய் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்பதால், கத்தியை முழுதிருப்தியான படமாக கொடுத்து விட முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் விஜய்.


அதோடு, இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதன்காரணமாக, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியை படமாக்க தற்போது ரூ. 1 கோடி மதிப்பில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த செட் இதுவரை விஜய் படங்களில் இல்லாத வகையில் ஹாலிவுட் படங்களில் பயன்படுத்துப்படும் செட்களுக்கு இணையாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.