முதல் முறையாக இணையும் தனுஷ்,பார்த்திபன் கூட்டணி

ஆடுகளம் படத்தை தொடர்ந்து கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஆரம்பமானது. இந்த படம் வட சென்னையை மையமாக கொண்ட படம் என்பதால், இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், படத்தின் ஒரு முக்கிய கேர்கடரில் பார்த்திபன் நடிக்கிறார்.
தனுஷின் வுண்டர் பார்நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனிக்க இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். மேலும் படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.