பாண்டிச்சேரியில் மாஸ் படத்தின் படப்பிடிப்புவெங்கட் பிரபு தற்போது சூர்யாவை வைத்து மாஸ்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, ப்ரணிதா நடித்து வருகிறார்கள்.
மேலும் இவர்களுடன் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சூர்யாவிற்கு அடிபட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. அது பொய்யான செய்தி என்று வதந்திக்கு வெங்கட் பிரபு முற்றுப்புள்ளி வைத்தார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அதன்பின் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பாண்டிச்சேரியில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளனர். பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக தூத்துக்குடிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யாவின் சிங்கம், சிங்கம் 2 படங்களும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment