அனுஷ்கா வித்தியாசமான ஆசைபழம்பெரும் நடிகைகள் சாவித்திரி, வாணிஸ்ரீ போல் பெயரெடுக்க ஆசையாய் உள்ளது என்று நடிகை அனுஷ்கா கூறினார். இதுகுறித்து ஜதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:
சீசனில் கிடைக்கும் பழங்கள் மாதிரி தான் நடிகைகள் ஒரு சீசனில் ஒரு நடிகையின் படம் ஜெயிக்கும். வேறு சீசினில் இன்னொரு நடிகை படம் ஜெயித்து விடும். என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை. இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்கிறேன்.
சில படங்களில் கவர்ச்சியாகவும் வேறு சில படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும் நடிக்கிறேன். டைரக்டர்கள் சொல்லி கொடுக்கிறபடி நடிக்கிறேன். படங்களின் வெற்றிக்கு தனி நபர் காரணம் அல்ல. புது கூட்டு முயற்சி ஆகும்.
முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் எல்லாம் ஆசை கிடையாது வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். சாவித்திரி, வாணிஸ்ரீ, ஜெயசுதா, ஜெயப்பிரதா போன்ற நடிகைகளை இன்றைக்கு உள்ள 14 வயது பசங்ககூட அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
அவர்கள் காலத்தில் இதுபோல் தகவல் தொழில்நுட்பங்கள் கிடையாது. ஆனாலும் இன்றும் அவர்கள் கேரக்டர்கள் பேசப்படுகிறது. ரசிகர்களும் அடையாளம் காண்கிறார்கள். ஆனால் என்னையோ இப்போதைய மற்ற நடிகைகளையோ அவர்கள் அளவுக்கு ரசிகர்களுக்கு அடையாளம் தெரியவில்லை.
இன்றைக்கு நடிகைகளுக்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கிறது. டி.வி., டுவிட்டர், பேஸ்புக் என்று வந்தும் அந்த நடிகைகளைபோல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. எனவே சாவித்திரி, வாணிஸ்ரீ மாதிரி நல்ல கேரக்டர்களில் நடித்து பெயரெடுக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. அடுத்த தலைமுறையும் ஞாபகம் வைத்துக்கொள்வது மாதிரியான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.


No comments:

Post a Comment