மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி ஸ்மார்ட்போன் ஒருபார்வை











மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மொபைல் போன் விற்பனைச் சந்தையில், வேகமாகத் தன் பங்கினை அதிகரித்து வருகிறது.அண்மையில், கேன்வாஸ் செல்பி என்ற பெயரில் புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
எச்.டி.சி. டிசையர் ஐ என்ற போனில் தரப்பட்டுள்ளது போல, இதில் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.

இத்துடன் சோனி சென்சார் ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் திரை 4.7 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் 
Octa-Core ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்,இரண்டு சிம் இயக்கம் மற்றும் 3ஜி இணைப்பு இயக்க முறை ஆகியனை இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.இந்த செல்பி கேமரா போனைப் பயன்படுத்தி, நாம் எடுத்த செல்பி போட்டோக்களை செம்மைப் படுத்தலாம்.
கண்கள், இமைகள், முக அமைப்பு, கண் புருவம், உதட்டுச் சாயம் இன்னும் பல விஷயங்களைத் திருத்தலாம்.

ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 10 லட்சம் செல்பி படங்கள் மக்களால் எடுக்கப்படுகின்றன. இவற்றில் 40% படங்களைச் சீர் செய்திட வேண்டியதுள்ளது.
இந்த இலக்கினை முன் நிறுத்தியே, இந்த செல்பி போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment