டிசம்பர் 31 என்னை அறிந்தால் பாடல்கள் ரிலீஸ்அஜீத் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்திருக்கும் படம் என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்திருக்கிறார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
டீசரை பார்த்த அனைவரும் படத்தின் பாடல்கள் மற்றும் படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் என்னை அறிந்தால்படத்தின் பாடல்களை டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் வெளியிட உள்ளனர். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய் ராம் கிரியேசன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜீத்தின் ரசிகர்களுக்கு 2015 ஆம் ஆண்டின் விடியல் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment