இன்டெக்ஸ் அகுவா ஒய் 2 ப்ரோ ஒருபார்வை

இரண்டு சிம் இயக்கத்தில் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய மாடல் மொபைல் போன் அகுவா ஒய் 2 ப்ரோ. 4.5 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 480 x 854. இதன் ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 

கருப்பு வண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்த போனில் சாப்ட் கீகள் தரப்பட்டுள்ளன. புளுடூத், யு.எஸ்.பி. மற்றும் டபிள்யூ லான் ஆகிய தொழில் நுட்பங்கள் நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்துகின்றன. 5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 0.3 எம்.பி. திறனுடன் வெப் கேமராவும் இயங்குகின்றன. ப்ளாஷ் தரப்பட்டுள்ளது. 

இந்த போனின் குவாட் கோர் சிப் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ, ப்ராக்சிமிடி சென்சார், அக்ஸிலரேட்டர், லைட் சென்சார் ஆகியவை இதற்கு மெருகூட்டுகின்றன. இதன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 4.2. ஜெல்லி பீன். இதனை அப்கிரேட் செய்து கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. MP3/WAV,MPEG4/ 3GP/AVI ஆகிய மல்ட்டி மீடியா பைல்களை இதில் இயக்கலாம். இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,600 mAh திறன் கொண்டது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,349.
http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif


No comments:

Post a Comment