அஞ்சலி நடிக்கும் புதிய படம் "மாப்பிளை சிங்கம்"அஞ்சலி காணாமல் போன பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், நடிக்க ஹீரோக்களுக்கும் பெரும் தயக்கம். இயக்குனர் சுராஜ் அந்த தயக்கத்தை மீறி அஞ்சலியை தனது அப்பாடக்கர் படத்தில் நாயகியாக்கினார். அதனைத் தொடர்ந்து அஞ்சலி மீதான தயக்கம் வடிந்தது. 
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மதன் தயாரிக்கும் புதிய படத்தில் அஞ்சலிதான் ஹீரோயின். ஹீரோ விமல்.

இதற்கு முன் மதன் தயாரித்த தேசிங்குராஜா படத்தில் விமல் நடித்திருந்தார். படத்தை இயக்கியது எழில். அப்போது எழிலின் உதவி இயக்குனர் ராஜசேகரன் சொன்ன கதை மதனுக்குப் பிடித்துப் போக அவரை தனது தயாரிப்பில் இயக்குனராக்கியிருக்கிறார். மாப்பிள்ளை சிங்கம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்தான் கலகலப்பு ஜோடியான அஞ்சலி, விமல் மீண்டும் இணைகிறது.


No comments:

Post a Comment