சுனாமி காட்சிகள் பிரமாண்டமாக இடம் பெறும் "கயல்" திரைப்படம்பிரபு சாலமன் டைரக்டு செய்யும் புதிய படம் ‘‘கயல்’’. இதில் சந்திரன் நாயகனாகவும் ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. கயல்படம் குறித்து டைரக்டர் பிரபு சாலமன் கூறியதாவது:
சுனாமி பாதிப்புகள் பின்னணியில் நடக்கும் காதல் கதையே இப்படம். பொழுதுபோக்கு விஷயங்கள், டி.வி., விஞ்ஞான வளர்ச்சி தெரியாத பதினெட்டு பருவ வயதில் ஒரு இளைஞனை கயல் சந்திக்கிறாள். அவன் மேல் ஈர்ப்பாகிறாள். சுனாமி வருகிறது. பிறகு அவனை தேடி அலைகிறாள். கண்டு பிடித்தாளா? என்பது கதை.
இதில் சுனாமி காட்சிகள் பிரமாண்டமாக இடம் பெறுகின்றன. நவீன தொழில்நுட்பத்தில் இதை உருவாக்கியுள்ளோம். சுனாமி காட்சிகள் நிச்சயம் புதுமாதிரி உணர்வை ஏற்படுத்தும். அடுத்த மாதம் சுனாமி தினம் வருகிறது. அப்போது படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிச்சர்ஸ் மற்றும் காட் பிச்சர்ஸ் சார்பில் பி.மதன், ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் ஆர்யா, சிவகார்த்திகேயன், விக்ரம் குமார், நடிகைகள் அமலாபால், அஞ்சலி, டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன், டி.சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment