மைக்ரோசாப்ட் லூமியா ஸ்மார்ட்போன் ஒருபார்வை











மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பெயருடன் இணைந்த மைக்ரோசாப்ட் லூமியாமொபைல் போனை விரைவில் வடிவமைத்து வெளியிட 
உள்ளது. அதே நேரத்தில், நோக்கியா என்னும் பெயரில், தொடக்க நிலை மற்றும் விலை மலிவான போன்களைத் தயாரித்து வழங்க உள்ளது.

சென்ற ஏப்ரல் மாதம், 700 கோடி டாலருக்கு மேல் கொடுத்து, நோக்கியாவை வாங்கிக் கொள்ளும் தன் ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் முடிவிற்குக் கொண்டு வந்தது. விலை மலிவான நோக்கியா பெயருடனான மொபைல் போன்கள் இனி விற்பனைக்கு வரும். தற்போது உள்ள நோக்கியா லூமியா போன்கள் விற்பனை செய்யப்பட்ட பின்னர், மைக்ரோசாப்ட் லூமியா என்ற பெயரில் போன்கள் வடிவமைக்கப்படும். மேற்கூறப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவன முடிவுகள், பேஸ்புக் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விற்பனைப் பிரிவின் தலைவர் டூலா ரைட்டிலா இவற்றைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment