ரகசியமாக படமாகும் க்ளைமாக்ஸ் காட்சிஅஜீத்தை கெளதம்மேனன் இயக்கி வரும் என்னை அறிந்தால் படத்தின் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சிகள் பக்கம் மட்டும் இன்னும் செல்லவே இல்லை கெளதம்மேனன். ஆரம்பத்தில் அஜீத்திடம் கதை சொன்னபோதே ஒன்லைனை சொன்னவர், கதையோட்டம் எப்படி எப்படி செல்லும் என்பதை மட்டும்தான் சொன்னாராம்.
மேலும், வழக்கமாக தனது படங்களில் நடிக்கும் ஹீரோக்களிடம் கதை சொல்ல மாட்டார் கெளதம்மேனன். அதனால்தான் அவரது இயக்கத்தில் நடிக்கயிருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் இருந்து விலகினார் விஜய். அதேபோல்தான் சிங்கம்-2 விற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் நடிக்க இருந்த சூர்யாவும், அப்படத்தின் பூஜைக்கு பிறகு நடிக்க மறுத்து வெளியேறினார்.
இந்த சூழ்நிலையில், அஜீத்திடம் அப்படி சொன்னால் பிரச்சினையாகி விடும் என்பதால், ஆரம்பத்திலேயே கதையை சொல்லிவிட்டார் கெளதம்மேனன். அதேசமயம் க்ளைமாக்ஸை மட்டும் சொல்லவில்லையாம். அதுபற்றி அஜீத் கேட்டபோது இன்னும் க்ளைமாக்ஸ் பற்றி நானே முடிவு செய்யவில்லை. போகப்போக சொல்கிறேன் என்று கூறினாராம்.
ஆனால் தற்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், க்ளைமாக்ஸை சமீபத்தில்தான் அஜீத்திடம் சொன்னாராம். அது அஜீத்துக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம். இருப்பினும், சமீபகாலமாக கோலிவுட்டில் கதைகளை காப்பி அடிப்பது சர்வசாதாரணமாக விசயமாகி விட்டதால், யாராவது அவுட் பண்ணி விடக்கூடாது என்று அந்த காட்சிகளை சீக்ரெட்டாக படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் கெளதம்மேனன்.
ஆரம்பத்தில் அஜீத்-அனுஷ்காவின் ரொமான்ஸ் காட்சிகளை சீக்ரெட்டாக படமாக்கியது போன்று அடுத்து க்ளைமாக்ஸ் காட்சிகளையும் சீக்ரெட்டான லொகேசனில் படமாக்குகிறாராம் கெளதம்மேனன்.


No comments:

Post a Comment