தொடங்கியது ராஜேசின் அடுத்தபடம்


ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா, தமன்னா நடிக்கும் படம் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஹாட்ரிக் ஹிட் தந்திருந்த போதும் அழகுராஜா என்ற ஒரேயொரு தோல்வி இயக்குனர் ராஜேஷை கொஞ்சம் கலவரப்படுத்தி விட்டது. 

ஜீவா, ஆர்யா என்று அவர் ஹிட் தந்த நடிகர்களிடம்தான் அவரால் அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கேட்க முடிந்தது. ஆர்யாதான் எப்போதும் டேக்இட் ஈஸி ஆளாச்சே.

கால்ஷீட் தந்ததோடு இல்லாமல் தனது த ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு, புரொடக்ஷன் நம்பர் 4. தமன்னா ஹீரோயின். வழக்கம் போல் கதைக்குப் பதில் சந்தானமும் இருக்கிறார்.


No comments:

Post a Comment