அனேகன் திரைப்படப்பாடலை பாராட்டிய இயக்குனர் சங்கர்அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கமாரி என்ற பாடலை, பாடல்கள் வெளியீட்டிற்கு முன்பே வெளியிட்டனர். ராகேஷ் என்பவர் சென்னை தமிழில் பாடல் நெடுக புகுந்து விளையாடியிருக்கிறார். இது அவருக்கு முதல் பாடல்.

டங்கமாரி  ரசிகர்களை பிடித்தாட்டுகிறது. இளைஞர்களின் காதுகளில் இப்போது டங்கமாரிதான் தொடர்ந்து பொழிந்து கொண்டிருக்கிறது. திரையுலகினரையும் இந்தப் பாடல் ஆட்டுவித்துள்ளது.

ஷங்கர் டங்கமாரி குறித்து ட்வீட் செய்துள்ளார். கிழி லிரிக்ஸ்.... சிரிப்பை நிறுத்த முடியவில்லை. மாஸ் குத்து... இன்ஸ்டன்ட் ஹிட்... சியர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

எந்த பிஸியிலும் புதிய படங்களின் பாடல்களை கேட்பவர் ஷங்கர். கேட்டு பிடித்திருந்தால் ட்விட்டரில் அதனை பகிர்ந்து கொள்ளவும் செய்வார். அப்படி டங்கமாரியும் அவரால் புகழப்பட்டிருக்கிறது.

ஷங்கரின் கமெண்டுக்கு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பாடலின் ஹிட்டுக்கு ராகேஷும், ஹாரிஸும்தான் முழுக்காரணம் என்று அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment