கமலஹாசன் அடுத்தபடம் திப்புசுல்தான்திப்புசுல்தான் வாழ்க்கை கதை படமாகிறது. இதில் திப்பு சுல்தான் வேடத்தில் கமலஹாசன் நடிக்கிறார்.
ஏற்கனவே மருதநாயகம் சரித்திர கதையை படமாக்க கமலஹாசன் முனைப்பு காட்டினார். இதற்கான பட பூஜையையும் பிரமாண்டமாக துவக்கினார். ஆனால் யுத்த காட்சிகள், போர் வீரர்கள், அரங்குகள் என எதிர்பார்த்ததை விட அதிகம் செலவு ஆகும் என தெரிய வந்ததால் படவேலைகளை தொடர முடியவில்லை. படப்பிடிப்பு நின்று போனது.
ஆனாலும் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்பது கமலின் லட்சிய கனவாக இருக்கிறது. இதற்காக ஹாலிவுட் பட நிறுவனங்களுடன் பேசி வருகிறார்.
இந்த நிலையில் திப்புசுல்தான் கதையை அடுத்து படமாக்க கமல் முடிவு செய்துள்ளார். இதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. இந்த படத்தை கமலே தயாரித்து இயக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கமல் நடித்து வந்த விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாக இருக்கிறது.
விரைவில் திப்பு சுல்தான் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.


No comments:

Post a Comment