பருத்தி வீரனுக்கு பிறகு எனக்கு பெயர் சொல்லும் ஒரு வில்லேஜ் படம் - கொம்பன்
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரன் நடிக்கும் கொம்பன் படத்தை குட்டிப்புலி முத்தையா இயக்குகிறார். இது மாமனார் மருமகன் உறவின் மேன்மையை சொல்லும் கதை என்கிறார் கார்த்தி.இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மதுரை கதைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையை விட்டு விலகி நிற்கும் ராமநாதபுரத்து கதை. மதுரைக்கு தெற்கால எல்லா ஊரும் மதுரை மாதிரிதான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா ரொம்பவே வித்தியாசமா இருக்கு. தாயால் வளர்க்கப்பட்ட எனக்கும், தந்தையால் வளர்க்கப்பட்ட லட்சுமிமேனனுக்கும் உள்ள காதல்தான் மெயின் கதை என்றாலும். இதுவரை யாரும் சொல்லாத மாமனார் மருமகன் உறவின் மேன்மையை சொல்கிறோம்.

இந்த உறவுக்குள் கோப தாபங்கள், அன்புகள் நிறைந்து கிடக்கும். ஆனால் அன்பை மட்டும்தான் வெளிப்படுத்துவார்கள். எனது மாமனாராக ராஜ்கிரண் சார் நடிக்கிறார். சினிமாவோட ஆணி வேரையே பார்த்தவர். அவரு "தம்பி இந்த கேரக்டருக்கு நீங்க பொருத்தமா இருக்கீங்க"ன்னு சொன்னதே விருது கிடைச்ச மாதிரி இருந்தது. பார்வையிலேயே எல்லாத்தையும் சொல்லிவிட்டு போகிற பெண்ணாக லட்சுமி மேனன் நடிச்சிருக்காங்க. பருத்தி வீரனுக்கு பிறகு எனக்கு பெயர் சொல்லும் ஒரு வில்லேஜ் படம் அமைஞ்சதுல சந்தோஷமா இருக்கேன் என்கிறார் கார்த்தி.


No comments:

Post a Comment