யட்சன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அஜீத்
ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நட்புக்காக ஒரு சிறிய ரோலில் நடித்தார் அஜீத். அதோடு அந்த படத்தில் நடித்ததற்காக அவர் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, தற்போது ஆர்யா - கிருஷ்ணா நாயகர்களாக நடித்து வரும் யட்சன் என்ற படத்திலும் அஜீத் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த யட்சன் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன், ஏற்கனவே அஜீத் நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர். அதோடு ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் ஆர்யாவையும் நடிக்க வைத்தார். இந்த நிலையில், யட்சன் படத்தில் ஆர்யா, அஜீத்தின் ரசிகராகவே நடிப்பதால் ஒரு காட்சியில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய விஷ்ணுவர்தன் இதுபற்றி அஜீத்திடம் சொன்னாராம்.
அதற்கு, கெளதம்மேனன் இயக்கும் படத்துக்காக கெட்டப்பை மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதும் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று அஜீத் கூறியுள்ளாராம். ஆக, இதுவரை சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருந்த யட்சன் படத்தில் இப்போது அஜீத் நடிப்பது பற்றிய செய்திகள் புகையத் தொடங்கியிருப்பதால், யட்சனை புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.


No comments:

Post a Comment