திருட்டு விசிடி வேட்டையில் விஷால்















சமீபகாலமாக எந்த புதுப்படங்கள் திரைக்கு வந்தாலும் அடுத்த ஓரிரு தினங்களிலேயே திருட்டு விசிடிக்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன. இதனால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதனால் பார்த்திபன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தாங்களே கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடியை ஒழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானபோது, சென்னையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடி விற்பனை செய்தவர்களை போலீஸ்வசம் பிடித்துககொடுத்தார் பார்த்திபன். அதேபோல், காரைக்குடிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்குள்ள லோக்கல் சேனலில் புதிய படங்கள் ஒளிபரப்பாவதைக்கண்டு கொதித்துப்போன விஷால், நேரடியாக சென்று அவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்தார்.
இந்த நிலையில், தற்போது அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்களும் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பதை தனது வெளியூர் ரசிகர்கள் கொடுத்த தகவலின் பேரில், சமீபத்தில் கோவை, திருப்பூர் உள்பட பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்ற விஷால், அங்கு கடை கடையாக ஏறி இறங்கியிருக்கிறார். சில கடைகளில் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் இருப்பதை கண்டுபிடித்து அந்த நபர்களை போலீஸ்வசம் ஒப்படைத்தாராம். விஷாலின் இந்த திடீர் ரெய்டு காரணமாக, பல ஏரியாக்களில் விற்பனைககு வந்திருந்த ஏராளமான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களை வியாபாரிகள் பதுக்கி விட்டார்களாம்.


No comments:

Post a Comment