மீண்டும் ஜி.வி.பிரகாஷ்குமார்

பாரதிராஜாவின் அன்னக்கொடி, பாலாவின் பரதேசி, விஜய்யின் தலைவா என பிரபல டைரக்டர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியைப் போலவே அவருக்கும் ஹீரோ ஆசை ஏற்பட்டதால் பென்சில் படத்தில் நடித்தவர் இப்போது டார்லிங் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.
ஆனபோதும், இன்னும் அவர் முழுநேர நடிகராகவில்லை. இசையில் ஒரு காலும், நடிப்பில் இன்னொரு காலுமாகத்தான் இருக்கிறார். தான் நடித்து வரும் பென்சில், டார்லிங் படங்களுக்கு மட்டுமின்றி, காக்கா முட்டை, ஈட்டி, கொம்பன், சூதாடி என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்தும் வருகிறார். அந்த வகையில் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எந்நேரமும் அவர் தனது இசைகூடாரத்தில்தான் முகாமிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது தனது இசைப்பயணத்தில் சிறிய தேக்க நிலை தென்பட்டாலும், தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் படங்கள் வெளியாகும் போது மீண்டும் பழைய பரபரப்பு தொற்றிக்கொள்ளு என்று கூறி வரும் ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா ரீமேக் செய்யவிருக்கும் சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கும் இசையமைக்கிறாராம். ஏற்கனவே 1978ல் இப்படத்துக்கு இளையராஜா சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார். அதனால் தானும் இந்த காலத்துக்கு ஏற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்று அந்த படத்துக்காகவும் கூடுதலாக உழைப்பை கொடுக்கப் போகிறாராம் அவர்.


No comments:

Post a Comment