நீச்சல் உடை இனி இல்லை - சமந்தாதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் சமந்தா, பிகினி - டூ பீஸ் உடைகளை நெருங்கவிடாமல், ஓரளவு டீசன்டாகத்தான் நடித்து வந்தார்.
ஆனால், 'அஞ்சான்' படத்தில் பிகினி உடைதரித்து அதிரடியாக பிரவேசித்தார். அதற்கு பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. மாறாக, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்ததற்கு அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. ரசிகர்கள் பலரும், 'குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடியுங்கள்' என, அவரிடம் கூறி வருகின்றனராம்.

 அதனால், 'இனிமேல் தப்பித்தவறி கூட, பிகினி பக்கம் திரும்பமாட்டேன். இப்போதைய இளம் ரசிகர்களின் ரசனை ஆபாசமாகி விட்டதாக நினைத்தேன். ஆனால், அவர்கள் கூறிய கருத்தைப் பார்க்கையில், இளம் ரசிகர்களின் ரசனை ஆரோக்கியமாக உள்ளதை உணர்ந்துள்ளேன்' என, சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment