காதலரை கைபிடிக்கிறாராம் பூஜாடைரக்டர் சரண் இயக்கிய ஜேஜே என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பூஜா. சிங்கள நடிகையான இவர் அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல், தம்பி, நான் கடவுள் என பல படங்களில் நடித்த பூஜா, பின்னர் மார்க்கெட் சரிந்தபோது தாய்மொழியான சிங்கள படங்களில் நடிப்பதற்கு இலங்கை சென்று விட்டார்.

அப்போதே அவர் யாரோ காதலருடன் ஊர் சுற்றிக்கொண்டு திரிவதாக மீடியாக்களில் செய்திகள் கசிந்தன. ஆனால், பின்னர் கோலிவுட்டுக்கு வந்தபோது அதை மறுத்தார் பூஜா. நான் யாரையும் காதலிக்கவில்லை. என் பாய் ப்ரண்டுகளுடன் வெளி இடங்களுக்கு செல்வதை இப்படி சித்தரித்து வருகிறார்கள் என்று கூறினார். அதோடு விடியும் முன் என்ற படத்தில் நடித்தவர், கடவுள் பாதி மிருகம் பாதி என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் தற்போது நடித்துள்ளார்.


ஆனால், இந்த படத்தில் நடித்து வந்தபோது தனது அபிமானத்திற்குரிய சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்டார் பூஜா. அதோடு டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோருக்கு சினிமா மேடைகளிலேயே முத்தம் கொடுத்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். ஆனபோதும் எந்த பலனும் இல்லை. பூஜாவுடன் இனிக்க இனிக்க பேசியவர்கள்கூட படவாய்ப்பு என்று அவர்களை நெருங்கியபோது முகத்தை திருப்பிக் கொண்டார்களாம்.
அதனால், இப்போதே 33 வயதாகி விட்டதால், இன்னும் சினிமாக்காரர்களை நம்பி காலம் கடத்திக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை என்று முடிவு செய்துவிட்ட பூஜா, தனது இலங்கை காதலரான தீபக் சண்முகநாதன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உறுதி செய்து விட்டாராம். அதனால் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, டிசம்பரில் காதலரை கைபிடிக்கிறாராம் பூஜா.


No comments:

Post a Comment