எக்ஸெல்லில் கர்சர் உள்ள செல்லை எப்படி கண்டுபிடிப்பது













எக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த 
அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டியதிருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் அந்த செல் உள்ளது என்று அறியாமல், ஸ்குரோலிங் பார் அல்லது அம்புக் குறி கீகளை அழுத்தியவாறு தேடுவோம்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு சிறிய தீர்வு வழி ஒன்று உள்ளது. ஒன்றல்ல, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சற்று சுற்றுவழி. உங்களுக்கு நீங்கள் இருந்த செல் அட்ரஸ் அல்லது அதன் பெயர் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தால், [Ctrl]+G கீகளை அழுத்தி, பின்னர் செல் எண் அல்லது பெயர் டைப் செய்து என்டர் அழுத்த, அந்த செல் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால், நாம் பெரும்பாலும், செல்லின் எண் அல்லது பெயரை நினைவில் வைத்திருக்க மாட்டோம். அந்த சூழ்நிலையில், கண்ட்ரோல்+பேக் ஸ்பேஸ் அழுத்துங்கள். 

ஜில் என்று, நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த செல்லுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். 

இதனைச் செயல்படுத்த, நீங்கள் கர்சரை வைத்திருக்கும் செல், மானிட்டர் திரையில் இருக்கக் கூடாது. அப்போதுதான், அந்த செல் கிடைக்கும்படி, மானிட்டரில் திரைக் காட்சி மாற்றப்படும். கர்சர் இருக்கும் செல், மானிட்டர் திரையில் இருந்தால், நீங்கள் கண்ட்ரோல் மற்றும் பேக் ஸ்பேஸ் அழுத்துகையில், திரைக் காட்சி அப்படியே தான் இருக்கும். ஏனென்றால், அந்த செல் தான் உங்கள் முன் காட்டப்படுகிறதே.

எனவே இந்தக் கட்டளையினை சோதித்துப் பார்க்க விரும்பினால், செல் ஒன்றில் கர்சரை வைத்துவிட்டு, பின் ஸ்குரோல் பார் மூலம் அல்லது வேறு வழிகளில் சற்றுக் கீழாகச் செல்லுங்கள். அதன் பின் இந்தக் கட்டளை கொடுத்துப் பாருங்கள்.

ஷார்ட் கட் கீகள்: காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். 

Ctrl+]
கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட்+ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும். 

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும். 

என்டர் கீ (Enter)அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.


No comments:

Post a Comment