தொடங்கியது ரஜினி முருகன் படப்பிடிப்பு
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் நடிக்கும் ரஜினி முருகன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், இயக்குனர் லிங்குசாமி, ராஜேஷ்.எம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.காரைக்குடியில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மதுரையில் 25 நாட்கள் நடக்கிறது. இமான் இசை அமைக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.

 கிராமிய பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், சூரி கமல் ரசிகராகவும், ராஜ்கிரண் எம்.ஜி.ஆர்.ரசிகராகவும், லட்சுமிமேனன் விஜய் ரசிகராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இது முழு நீள காமெடிப் படம்.


No comments:

Post a Comment