பின்னணி பாடகியான நடிகைவிஜயசேதுபதியுடன் நடித்த பீட்சா படம் னுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனால் அவரை சில படங்களுக்கு புக் பண்ணினார்கள். 
ஆனபோதும், அப்படி அவர் நடித்து முடித்து விட்ட சில படங்கள் இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கின்றன. ரெண்டாவது படம், முறியடி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் உள்ளிட்ட படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை.

அதனால் சில டைரக்டர்களை சந்தித்து அவர் சான்ஸ் கேட்டபோது, பாடிலாங்குவேஜை மாற்ற வேண்டும், எடை குறைக்க வேண்டும் என்று சில அறிவுரைகளை சொல்லி அவரை கழட்டி விட்டு விட்டனர். ஆனால் ரம்யாவைப் பொறுத்தவரை வாயைக்கட்டி வயித்தகட்டி உடம்பை குறைப்பதெல்லாம் நடக்காத காரியமாம். காரணம், சாப்பாடு விசயத்தில் அவர் பலே கில்லாடியாம்.

அதனால் புதிய படங்களுக்காக முயற்சி எடுப்பதை நிறுத்திய ரம்யா நம்பீசன், படங்கள் வரும்போது வரட்டும் என்று பட முயற்சியை விட்டு விட்டு இப்போது பின்னணி பாடுவதில் தனது ஆர்வத்தை திருப்பி விட்டார். தமிழில் பாண்டியநாடு படத்தில் தான் பாடிய பை பை பை மற்றும், டமால் டுமீல் படத்தில் பாடிய போகாதே உள்ளிட்ட சில பாடல்கள் ஹிட்டடித்திருப்பதால், தற்போது மேலும் பல புதிய படங்களிலும் பாடிக்கொண்டிருக்கிறாராம். அதனால், முன்பெல்லாம் சென்னைக்கு வரும்போது எந்தெந்த டைரக்டர்களை பட விசயமாக சந்திக்க வேண்டும் என்று லிஸ்ட் போட்டு விட்டு வரும ரம்யா நம்பீசன், இப்போது எந்தெந்த மியூசிக் டைரக்டரை பார்க்க வேண்டு என்றுதான் பட்டியல் போட்டு விட்டு வருகிறாராம். 


No comments:

Post a Comment