விலை குறைப்பு - சாம்சங் கேலக்ஸி எஸ்5 மற்றும் எஸ்5 எல்.டி.இ.சாம்சங் நிறுவனம், தன் புதிய மாடல் மொபைல் ஸ்மார்ட் போன்களான எஸ்5 மற்றும் எஸ்5 எல்.டி.இ. ஆகியவற்றின் விலையை அதிகார பூர்வமாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்ற ஏப்ரல் மாதம், காலக்ஸி எஸ்5, இந்தியாவில் ரூ. 51,500 என விலையிடப்பட்டு விற்பனைக்கு வந்தது. தற்போது அதன் விலை ரூ. 37,500 எனக் குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் காலக்ஸி எஸ்5 4ஜி எனப் பெயரிட்டு ஜூலையில் அறிமுகமானபோது அதன் விலை ரூ. 53,500. தற்போது அதன் விலை ரூ. 40,300 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போன்கள் வெளியான தொடக்க நிலையிலேயே, இணைய தள வர்த்தகர்களால், விலை குறைக்கப்பட்டு தரப்பட்டது. அந்த விலைக் குறைப்பிற்கும் தனக்கும் தொடர்பில்லை என, சாம்சங் அறிவித்தது.

பொதுவாக, புதிய மாடல் போன் ஒன்றை அறிமுகப்படுத்துகையில், தன் பழைய மாடல் போன்களின் விலையைக் குறைப்பது சாம்சங் நிறுவனத்தின் வழக்கம். அந்த வகையில், தற்போது மேலே சொல்லப்பட்ட மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment