உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு விஜய் 3 லட்சம் உதவி
விஜய் நடித்த கத்தி படம் தீபாவளி அன்று ரிலீசானது. அன்றைய தினம் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாவாக கொண்டாடினார்கள். கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்குள்ள வடக்கன்சேரி என்ற ஊரைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்ற ரசிகர் விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தபோது தவறி விழுந்து இறந்தார். 

கத்தி படத்தின் வெற்றி விழாவுக்காக கோவை சென்றிருந்த விஜய். அங்கு உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினரை வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு மூன்று லட்சம் ரூபாயை குடும்ப நிதியாக வழங்கினார். "உன்னி கிருஷ்ணன் உயிரோடு இருந்தால் உங்களுக்கு என்ன செய்வாரோ அதை நான் செய்கிறேன்" என்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பினார்.


No comments:

Post a Comment