எல்.ஜி. ஜி3 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ஒருபார்வை















தன்னுடைய ஜி3 ஸ்டைலஸ் மொபைல் ஸ்மார்ட் போனை, அண்மையில் எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இதில் qHD டிஸ்பிளே தரும் 5.5 அங்குல அளவிலான திரை தரப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமராவும், 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இதில் இயங்குகின்றன. இதில் ரப்பர்டியம் ஸ்டைலஸ் பேனா ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புதிய இயக்கும் அனுபவம் கிடைக்கிறது. இதன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மாடல் போன் மட்டும் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாகத் தரப்படுகிறது. 

நல்ல டிஸ்பிளே, நவீன வடிவமைப்பு மற்றும் தரத்தக்க விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜி3 ஸ்டைலஸ் மொபைல் ஏற்றதாக இருக்கும்என இதனை அறிமுகப்படுத்துகையில் எல்.ஜி. நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அலுவலர் அமித் குஜ்ரால் தெரிவித்தார். இந்திய ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில், இனி வரும் மாடல்கள், பின்பற்றும் மாடல் போனாக ஜி3 ஸ்டைலஸ் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment