சூதுகவ்வும் இயக்குனரின் அடுத்த படத்தில் வாரிசு நடிகர்










விஜய்சேதுபதியை வைத்து சூது கவ்வும் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. முதல் படத்தில் வெற்றியடைந்த இயக்குநர்கள் அடுத்தப் படத்தை இயக்க அதிக காலம் அவகாசம் எடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இதற்கு நலன் குமாராசாமியும் விதிவிலக்கில்லை. சூது கவ்வும் படம் வெளியாகி ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் ஆகியும் அவரது அடுத்தப் படத்தைப் பற்றி அறிவிப்பு இன்னும் வரவில்லை. நலன் குமாராசாமியின் அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார் என்று ஆரம்பத்தில் செய்திகள் வந்தன. 


பிறகு விஜய்சேதுபதி கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கிறார் என்று செய்தி வந்தது. பிறகு நலன் குமாராசாமியின் படத்தில் சூர்யா நடிக்கிறார் என்று தகவல் பரவியது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி...நலன் குமாரசாமியின் அடுத்தப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவில்லை... சூர்யாவும் நடிக்கவில்லை. கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாக உள்ளது.


No comments:

Post a Comment