ரஜினி புதிய முடிவு

ரஜினி இனி வருஷத்துக்கு 3படங்கள் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.ஒரு படத்தில் நடித்து, அந்தப் படம் ரிலீஸான பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பார். 

அபூர்வராகங்கள் படத்தின் மூலம் திரையில் தோன்றிய ரஜினி அதன் பிறகு வில்லனாக நடித்து வந்தார். அடுத்தடுத்த வருடங்களிலேயே ஹீரோவாக வளர்ந்தார்.ஹீரோவாக அவர் நடித்த காலக்கட்டத்தில் ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாக 18 படங்கள் நடித்துவந்தார் ரஜினி. காலப்போக்கில் பட எண்ணிக்கையைக் குறைத்தார். 2000 அம் வருடங்களுக்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், மூன்று வருடங்களுக்கு ஒரு படம் என பெரிய இடைவெளி கொடுக்க ஆரம்பித்தார்.அப்படிப்பட்ட ரஜினி தற்போது கோச்சடையான் ரிலீஸாவதற்கு முன்பே லிங்கா படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அது மட்டுமின்றி லிங்கா படப்பிடிப்பு முடிந்த உடனே அடுத்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் எந்திரன் படத்தை இயக்கிய ஷங்கர்தான் அடுத்தப்படத்தை இயக்குகிறார்.