என் வழி தனி வழி - ஆர்.கே.

மக்கள் பாசறை வழங்கும் என் வழி தனி வழிநடிகர் ஆர் கே வின் அடுத்த படம். எல்லாம் அவன் செயல்’, ‘அழகர் மலை’, என வெற்றிப்படங்களைக் கொடுத்த ஆர் கே அதன்பிறகு இயக்குனர் பாலாவின் பரதேசி, பி வாசு இயக்கிய புலிவேஷம் ஆகிய படங்களில் நடித்தார். விஜய்யின் நட்புக்காக ஜில்லா படத்தில் தோன்றினார்.
ஷாஜி கைலாஷ்- ஆர்கே இணைந்து எல்லாம் அவன்செயல்என்ற நூறு நாட்கள் ஓடிய படத்தைத் தந்தனர். மீண்டும் ஷாஜி கைலாஷ் ஆர்கே கூட்டணி என் வழி தனி வழி படத்திற்காக இணைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுருக்கம் ஆர் கே. அவரின் வெகு பிரபலமான வசனம் என் வழி தனி வழி என்பதாகும். இப்போது இந்த ஆர் கே சூப்பர் ஸ்டாரான ஆர் கே வின் (ரஜினியின்) பிரபல வசனத்தை தனது படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளது கோடம்பாக்கத்தில் பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
படத்தில் மிகப்பெரும் நடிகப் பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் ஆர் கே . டத்தோ ராதாரவி, விசு, ஆஷிஷ் வித்யார்த்தி, தலைவாசல் விஜய், இளவரசு, சம்பத், சீதா, ரோஜா மற்றும் காமடிக்கு விவேக் , பரோட்டா சூரி, ஹீரோயின்களாக பூனம் கவுர், தெனாலி ராமன் புகழ் மீனாக்ஷி தீட்சித் நடித்துள்ளனர்.
இதற்கு முன் வக்கீல் கதாபாத்திரமேற்ற ஆர் கே இதில் விரைப்பான போலீஸ் அதிகாரியின் பாத்திரமேற்கிறார். போலீஸ் கதாபாத்திரமேற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் அதனை நடித்த நாயகர்களுக்கு மிகப்பெரிய உயர்வைத் தந்துள்ளது. ரஜினிக்கு, கமலுக்கு, சத்யராஜ், சரத்குமார், விக்ரமுக்கு, சூர்யாவுக்கு என அத்தனை ஹீரோக்களும் மிகப்பெரிய கதாநாயகர்கள் அந்தஸ்தை போலீஸ் வேடமேற்று நடித்த பிறகு அடைந்திருக்கிறார்கள். போலீஸ் ஸ்டோரின்னாலே வெற்றிதான் என்பது தமிழ் சினிமா வரலாறு.
ஆனால் என் வழி தனி வழி யில் ஆர் கேவின் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரியாக வந்து என்னசெய்யப்போகிறது என்பதை புதுமையாக சட்ட ஆதாரத்தோடு படமாக்கியிருக்கிறாரியக்குனர் ஷாஜி கைலாஷ் . போலீஸ் அதிகாரிகளின் துயரத்தையும் அவர்கள் கடந்து வரும் பாதையும் அவர்களுக்கான விடிவையும் இந்த என் வழி தனி வழி பேசப்போகிறது என்கிறார் ஆர் கே. போலீஸ் அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்து தங்கள் வீடுகளில் இப்படத்தை போட்டுக்காட்டலாம். அவர்களுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படமாக இது அமையும் என்கிறார் இதன் வசன கர்த்தா வி பிரபாகர். போக்கிரி படம் உட்பட பதினைந்து படங்களுக்கு எழுதிய பிரபாகர் என் வழி தனி வழி யின் வசனம் எழுதும் பணியைச் செய்துள்ளார்.
அட்லீனா கேத்ரீனா என்ற ரஷ்யன் மாடல் அந்தரத்திலே தொங்கிக்கொண்டு கயிற்றில் ஆடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர். அவரை வைத்து ஒரு பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
காமிராவை ராஜரத்தினம் கையாள, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சூப்பர் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.
சென்னை, கேரளா, ஜோர்டான் ஆகிய இடங்களில் என் வழி தனி வழி மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது