கத்தி படத்தின் டீஸர் வெளியாவதில் சிக்கல்

ஜில்லா படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீஸர் கடந்த ஏப்ரல் மாதமே வெளிவர வேண்டிய நிலையில் இன்னும் வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்து பார்த்தால் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
விஷயம் என்னன்னா? கோபி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் தான் கத்திபடத்தின் டிசைனர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் முருகதாஸின் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் முருகதாஸின் பல படங்களுக்கு டிசைனராக பணியாற்றியுள்ளனர்.இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென இவர்கள், நாங்கள் இருவரும் சொந்தமாக பிசினஸ் செய்யப்போகிறோம் அதனால் கத்தி படத்தில் இருந்து விலகுவதாக முருகதாஸிடம் அறிவித்துள்ளனர். இதனால் விஜய், முருகதாஸ் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திடீரென இவர்கள் இருவரும் விலகியதால்தான் கத்தி படத்தின் டீஸர் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதிய டிசைனர் ஒப்பந்தம் ஆகி, வேலை நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் கத்தியின் டீஸர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.