'பேட் கேர்ள்’ தமிழில்

சர்சைக்குரிய மாடல் அழகி மற்றும் நடிகையுமான ஷெர்லின் சோப்ராவை பற்றி பாலிவுட்டில் தினமும் செய்திகள் வருவதுண்டு. இவர் டைம் பாஸ்’, ‘கேம்’, ‘ரெட் சுவாஸ்டிக்போன்ற ஒரு சில பாலிவுட் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் காமசூத்ராஎன்ற 3டி படத்தில் நடித்து வருகிறார்.


ஷெர்லின் சோப்ரா 2002-ல் தமிழில் யுனிவர்சிடிஎன்ற படத்தில் நடித்துள்ளார், அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது ஷாஜியம் இயக்கும் பேட் கேர்ள்’(Bad Girl) என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடிக்கிறார்.
இது மாடலின் ஆக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதை என்பதால் அந்த துறையில் இருப்பவர்கள் நடித்தால் கதைக்கு இன்னும் பக்கபலமாக இருக்கும் என்பதால் தான் ஷெர்லின் சோப்ராவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஸ்ரீமுரளி என்பவர் இசை அமைக்கிறார், இவர் 2500க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களிடம் கீ போர்டு வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பெங்களுரை சேர்ந்த ஷா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஹிந்தி, தெலுங்கு, போஜ்புரி மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட போவதாக இயக்குனர் ஷாஜியம் தெரிவித்துள்ளார்.