ஆர்யா மீது அன்பு செலுத்தும் அஜித்

தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருப்பவர் தல அஜித். கடந்த சில வருடங்களாக இப்படி ஒரு கொள்கையை அவர் வைத்திருப்பதால் சினிமா பர்சனாலிட்டிகளிடமும் அதிக நெருக்கத்தைக் காட்டாமல் தள்ளியே இருப்பார் அஜித். 


அதிகபட்சம் நேரில் சந்திக்க நேரும்போது ஹலோ.. ஹாய்.. என் குசலம் விசாரிப்பார் அஜித். அதைத்தாண்டி சினிமாக்காரர்களிடம் சினேகம் வைத்துக்கொள்ள விரும்பமாட்டார் அஜித். அப்பேற்பட்ட அஜித்திடம் சமீபகாலமாக மாற்றம் தெரிவதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்!. அதாவது, தொழில் ரீதியாக அறிமுகமாகும் பல பேர்களிடம் நட்பு பாராட்டத் தொடங்கி இருக்கிறாராம் அஜித்.
அப்படி அஜித் அண்மையில் அதிகமாக அன்பு செலுத்துவது ஆர்யா மீதுதானாம். ஆர்யா என்ன சொன்னாலும் அஜித் தட்ட மாட்டார் என்கிற அளவுக்கு அஜித்-ஆர்யா நட்பு படு ஸ்ட்ராங்காக இருக்கிறதாக சொல்கிறார்கள். அஜித் உடனான தன் நட்பை பயன்படுத்தி, ராஜாராணி பட இயக்குநர் அட்லீ, அழகுராஜா பட இயக்குநர் ராஜேஷ் எம். ஆகியோருக்கு அஜித்திடம் சிபாரிசு செய்து அவரை கதை கேட்க வைத்தது மட்டுமல்ல, அவர்களது இயக்கத்தில் நடிக்க அஜித்தின் கால்ஷீட்டையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஆர்யா.
S