தெலுங்கில் கொடி நாட்டும் நயன்தாரா

மலையாள நடிகையான நயன்தாராவுக்கு தமிழைப்போலவே தெலுங்கு சினிமாவிலும் ஒரு இடம் இருந்து கொண்டேயிருக்கிறது. 
அவர் பிசியாக நடித்து வந்த காலகட்டத்தில் தமிழில் ஒரு படம் முடித்தால், தெலுங்கிலும் ஒரு படத்தை முடித்துக்கொடுத்தார். அந்த அளவுக்கு ஆந்திராவிலும் நயன்தாராவின் கொடி அப்போதே பறந்து கொண்டிருந்தது.
அதேபோல், பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று திரையுலகிடமிருந்து அவர் விடைபெற்று சென்றபோதும், தெலுங்கில் ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தமைக்காக ஆந்திர அரசின் நந்தி விருதினையும் பெற்றவர். இதனால் நயன்தாராவின் பர்பாமென்சுக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு இடம் இருந்து கொண்டேயிருக்கிறது.

அதனால்தான், தமிழில் இரண்டு படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கில் கைவசம் 3 படங்கள் வைத்திருக்கிறார். அதோடு, அங்குள்ள மகேஷ்பாபு உள்ளிட்ட சில ஹீரோக்கள் அவரை முழுநேர தெலுங்கு நடிகையாகி விடுமாறும் அழைப்பு விடுக்கிறார்களாம். அதனால், தற்போது கைவசமிருக்கும் படங்களுக்குப்பிறகு தான் எதிர்பார்க்க மாதிரி கோடம்பாக்கத்தில் புதிய வாய்ப்புகள் அமையாவிட்டால், இங்கிருந்து போராடிக்கொண்டிருக்காமல் தனது முகாமை ஆந்திராவுக்கு மாற்றி விடும் முடிவில் இருக்கிறார் நயன்தாரா.